தொடரும் யுத்தம் - Now Gavaskar vs Border
நேற்று பாண்டிங்குக்கு தக்க பதிலடி தந்த கவாஸ்கர், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹ¥க்ஸ் ஒரு பாருக்கு வெளியே அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வை தனது பேட்டியில் அனாவசியமாக குறிப்பிட்டதை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், கண்டித்துள்ளார். கிரிக்கெட் உலக சகாப்தங்களான கவாஸ்கர், பார்டர் பெயரில், இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறும் அணிக்கு கவாஸ்கர்-பார்டர் கோப்பை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பார்டர் கவாஸ்கரின் நல்ல நண்பரும் கூட! தற்போது அந்த (20 வருட) நட்பு முறியும் தறுவாயில் உள்ளது என்று பார்டர் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பான இந்த பாண்டிங்-கவாஸ்கர் சண்டையில் இதுவரை twelth man-ஆக இருந்த பார்டர், இப்போது பாண்டிங்குக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்! "ஆஸ்திரேலிய அணியின் நடத்தை மற்றும் டேவிட் ஹ¥க்ஸ் குறித்தும் (என் நண்பரான) கவாஸ்கர் கூறியுள்ள கருத்துகள் தேவையற்றவை, முறையற்றவை. (இத நான் முதலில் சொன்னதுக்கு, என்னய பிடிச்சு, சிலர் உலுக்கிட்டாங்க :)) டேவிட் ஹ¥க்ஸ், ஒரு திறமையான வீரர், நல்ல குடும்பத் தலைவர் மற்றும் நண்பர். அவரை இதில் இழுத்தது, மிகத் தவறு.
ஆஸ்திரேலியா விளையாடும் விதம் குறித்து, கவாஸ்கருக்கு (பண்பாட்டு அளவிலான) ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது! ஆஸ்திரேலியர்களின் கடின வகைப்பட்ட (hard and tough) ஆட்ட அணுகுமுறையை, இந்தியாவில் இருப்பவர்கள் சரியில்லாததாக எண்ண வாய்ப்புள்ளது. அது போலத் தான், ஆஸ்திரேலியர்கள், சில சமயங்களில், இந்தியாவின் ஆட்ட அணுகுமுறையை விரும்புவதில்லை. கிரிக்கெட், உலக அளவில் விளையாடப்படும்போது, ஆடும் அணிகளின் கலாச்சாரப் பின்னணி வேறுபடுவதால், ஆடும் விதம் சரியா தவறா என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுவதில் ஆச்சரியமில்லை.
ஒரு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர், ஒரு பேட்ஸ்மனை, 'you lucky bastard' என்று கூறுவது, இந்திய / வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்குத் தவறான ஒன்றாகத் தோன்றினாலும், இன்ன சிலருக்கு, அது சாதாரண விஷயமாகவே படலாம்! இப்படி கலாச்சார சங்கதிகள் மாறுபடுவதை கவாஸ்கர் உணராதது, கவனிக்கத் தவறியது துரதிருஷ்டமே!
ஆஸ்திரேலிய வீரர்கள் sledging செய்வதை நான் ஒப்புக் கொள்ளும் நேரத்தில், நாங்கள் கடுமையாக விளையாடுவது (play hard) போல் தோன்றினாலும், நேர்மையான முறையிலேயே விளையாடுகிறோம். ஆஸ்திரேலிய வீரர்களின் கள நடத்தை (on-field behaviour) மட்டுமே சரியில்லை என்பது போன்ற தொனி கவாஸ்கரின் பேச்சில் தெரிகிறது."
என்று கூறி சண்டையை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ள அண்ணன் ஆலன் பார்டர் வாழ்க, வளர்க ;-) இப்ப கவாஸ்கருக்கு ஆதரவாக பிஷன்சிங் பேடி களமிறங்கினால், ஆட்டம் சூப்பரா களை கட்டும் என்பது என் எண்ணம்! மேலும் பலரும் இதில் மூக்கை நுழைத்து, சண்டையும் அமர்க்களப்படும் :)
இந்தப் பிரச்சினை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லெம்மன் பேசுகையில், "கவாஸ்கர் போன்ற உலக அலவில் மதிக்கப்படும் ஒரு மனிதர், காலமாகி விட்ட ஒருவரின் நினைவுக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் பேசுவது கண்ணியமற்றது ! இது பலரை புண்படுத்தியுள்ளது. ஒரு அணி வீரரின் கள நடத்தை மோசமானதாக இருந்தால், அவர் மேல் நடவடிக்கை எடுக்க, நியமிக்கப்பட்ட அலுவலர்கள் உள்ளனர் என்பதை கவாஸ்கர் வசதியாக மறந்து விட்டார்" என்று அவர் சார்பில் ஒரு கூக்ளி பந்து வீசி, விக்கெட் கிட்டுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பது போல் தெரிகிறது :) (லெம்மனுக்கும் டைம் சரியில்லையோ, அனாவசியமா வாயை விடறாரே ?)
நான் ஏற்கனவே கூறியது போல, 'நமக்கு, அடிதடி, வம்புச்சண்டை போன்றவற்றை வேடிக்கை பார்ப்பதில் ஓர் அலாதி சுகம், அவ்வளவு தான் மேட்டர் ;-)' இந்த மேட்டர், உலகக் கோப்பை ஆட்டங்களை விட விறுவிறுப்பாக செல்லும் போல் தோன்றுகிறது :)))
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 310 ***
9 மறுமொழிகள்:
Test comment :)
பார்டர் கூறிய அதே கருத்து (ஆடும் அணிகளின் கலாச்சார பின்னனி)ஆஸி அணிக்கும் பொருந்தும். களத்தில் இறங்கி விட்டபின், இரு அணியினருக்கும் பொதுவான, ஒரு குறைந்த பட்ச மரியாதையாவது கொடுக்க வேண்டும். பிரதான விருந்தாளியின் முதுகில் தட்டி இறங்கிப்போ என்று சொல்வதுதான் ஆஸியின் கலாசாரம் என்றால், 'பாரி'ல் அடிக்க கூடாது். மைதானத்தை விட்டு வெளியே வருமுன்னரே நையப் புடைக்க வேண்டும்.
பார்டர் ஒரு முறை அர்ஜுனா ரணதிங்கா வுடன் மோதிய போது, செவிட்டில் அறைந்தார்போல் அர்ஜுனா பதில் கொடுத்தார், "ஆஸியின் பின்னனி என்னவென்று உலகிற்கே தெரியும்" என்று. இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட கொள்ளையரும், கொலை காரர்களும்தான் இன்றிருக்கும் பல ஆஸிக்களின் மூதாதையர்கள். இதைத்தான் அர்ஜுனா குறிப்பிட்டார். இந்த கலாசாரப் பின்னனி மற்ற எல்லா நாடுகளுக்கும் கிடையாதென்பது உண்மைதான்.
நியமிக்கப்பட்ட அலுவலர்களும் தான் ஒருதலைப் பட்சமாக செயல் படுகிறார்களே? முத்தையா முரளிதரனுக்கு நேராத இன்னல்களா?
http://balablooms.blogspot.com
பாலா,
தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இதில் இனவெறி கொஞ்சம் கலந்திருப்பதாக எனக்குப் படுகிறது. அதனால் தான், நியமிக்கப்பட்ட அலுவலர்கள் கூட, வெள்ளையர்களின் கள நடத்தை மோசமாகும் பட்சத்தில், அவர்களுக்கு குறைவான தண்டனையும், பிறருக்கு அதிகபட்ச தண்டனையும் வழங்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது :(
அப்படித் தான் ஒரு முறை, தென்னாபிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியில், ஜென்டில்மேன் சச்சினுக்கே தண்டனை வழங்கிய ஆட்ட நடுவர் (match refree), அராகஜம் பண்ணிய ஆண்ட்ரு நெல்லை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் !!!
நன்றாக தொகுத்து பதிவு போடுறிங்க!
எல்லோருக்கும் தெரிந்த உண்மை-ய அவர் சொல்லப் போக, அவர் சொல்ல வந்த கருத்த மறந்துட்டு, (அவர் நண்பர் பார்டர் கூட..) இந்த உண்மைய திசை திருப்புவதுதான் வேடிக்கை!
இந்த விசயத்தில கவாஸ்கரை கண்டிப்பா பாராட்டலாம்!!
//
இந்த கலாசாரப் பின்னனி மற்ற எல்லா நாடுகளுக்கும் கிடையாதென்பது உண்மைதான்.
//
ஓ! இப்படி ஒரு வரலாறு இருக்கா?
செய்திக்கு நன்றி!
//
தென்றல் said...
நன்றாக தொகுத்து பதிவு போடுறிங்க!
//
Thanks !
ODI comment :))
அபுல்,
வாங்க, வாங்க :)
பாலா,
மெக்ராத்தும் கோதாவில குதிச்சிருக்காரு பார்த்தீங்களா?
Post a Comment